அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக வேட்பாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளது. இதில், முதல் வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்துப்பாண்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முத்துப்பாண்டி திடீரென அதிமுகவிலிருந்து விலகி, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்து கொண்டனர். அவருடன் 1வது வார்டு அதிமுக அவைத்தலைவர் ரமேஷ், நிர்வாகி மாரிமுத்து ஆகியோரும் அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், ‘‘‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாதனைகளாலும், தமிழக மக்களுக்கு அவர் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களாலும் இன்று தமிழகம் முழுவதும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்து வருகின்றனர். இது பாராட்டுக்குரியது’’’’ என்றார்.இதுகுறித்து முத்துப்பாண்டி கூறுகையில், ‘‘நான் கடந்த 15 ஆண்டுகளாக அதிமுகவில் வார்டு செயலாளராக இருந்தேன். ஆனால் இப்போது அங்கு ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல், தவறான அணுகுமுறை இருப்பதால் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்துள்ளேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். அதனால் அவருடைய வழியில் செல்ல என்னை அந்த திமுகவில் இணைத்து கொண்டேன்’’’’ என்றார். அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தது திண்டுக்கல் மாநகராட்சி தேர்தல் களத்தில் ஒரு திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 1வது வார்டில் திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதேபோல் இன்னும் சிலர் திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது….

Related posts

இந்திய மீனவர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குவதாக உள்ளது: வெளியுறவுத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஜுலை 2024 ஆம் மாதத்தில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்!

பாஜக கூட்டணிக்கு ஒரு இடத்தைக் கூட வழங்காததால் தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசு இவ்வளவு அலட்சியப் போக்கை காட்டுகிறதா?: நாடாளுமன்றத்தில் துரை வைகோ கேள்வி