அமெரிக்க எரிபொருட்களின் விலை கிடுகிடு உயர்வு…14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை அதிகரிப்பு!!

வாஷிங்டன் : உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்து இருப்பதை அடுத்து 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அங்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. தேசிய அளவில் சராசரியாக 1 கேலன் பெட்ரோலின் விலை 4.173 டாலராக அதிகரித்துவிட்டதாக அமெரிக்காவின் எரிபொருள் நிலவரங்களை கண்காணிக்கும் ஏஜன்சி தெரிவித்துள்ளது.2008க்கு பிறகு தற்போது தான் அமெரிக்காவில் இந்த அளவிற்கு எரிபொருள் விலை ஏற்றம் கண்டுள்ளது. அதிகபட்சமாக 4.5 லிட்டருக்கு இணையான ஒரு கேலன் பெட்ரோல் கலிபோர்னியாவில் 5.4 டாலருக்கு விற்பனையாகிறது. ஹவாய் மாகாணத்தில் ஒரு கேலன் 4.7 டாலர்களுக்கும் நெவேடாவில் 4.6 டாலர்களுக்கும் வர்த்தகமாகிறது. மேற்கு வெர்ஜீனியாவில் மட்டும் 4 டாலருக்கும் குறைவாக அதாவது 2.9 டாலருக்கு ஒரு கேலன் பெட்ரோல் விலை விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோபிடன் நேற்று ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் எல்என்ஜி எனப்படும் திரவமாக்கப்பட்ட எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ள ஒரே நாளில் எரிபொருட்களின் விலை அங்கு உயர்வை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த திடீர் விலையேற்றம் அமெரிக்க எரிபொருள் நுகர்வோருக்கு பெரும் பிரச்சனையாக உருமாறியுள்ளது. …

Related posts

காஷ்மீர் விவகாரத்தில் வன்முறை பற்றி பாக். பேசுவது அப்பட்டமான பாசாங்குத்தனம்: ஐநாவில் இந்தியா பதிலடி

அமெரிக்காவில் புயல் தாக்கி 52 பேர் பலி

பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்: ஈரான், ஈராக் இரங்கல்; மத்திய கிழக்கில் போர் தீவிரம்