அமெரிக்கா, லண்டனில் 11ம் தேதி துணிவு ரிலீஸ்

சென்னை: அமெரிக்கா, லண்டனில் அஜித்தின் துணிவு படம் ஜனவரி 11ம் தேதி ரிலீசாகிறது.அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள படம் துணிவு. வினோத் இயக்கியுள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி 11ம் தேதியே அமெரிக்கா, லண்டன் மற்றும் சில நாடுகளில் வெளியாக உள்ளது. இந்தியாவில் ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் விஜய் நடித்துள்ள வாரிசு படம், ஜனவரி 12ம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் வாரிசு படத்தின் டிக்கெட் முன்பதிவு இப்போதே தொடங்கியிருக்கிறது. இந்த இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாவதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன் சிரஞ்சீவி நடித்துள்ள வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர சிம்ம ரெட்டி ஆகிய படங்களும் ஜனவரி 13ம் தேதி ரிலீசாக உள்ளன….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்