அமமுக கூட்டணியில் 6 தொகுதிகள் எஸ்டிபிஐ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: பாளையில் மாநில தலைவர் போட்டி

சென்னை: சட்டமன்ற தேர்தலில், அமமுக தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இடம்பெற்றுள்ளது. எஸ்டிபிஐ கட்சிக்கு ஆலந்தூர், ஆம்பூர், பாளையங்கோட்டை, திருவாரூர், மதுரை மத்தி, திருச்சி மேற்கு ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத்  வெளியிட்டார். பாளையங்கோட்டை தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். ஆம்பூர் தொகுதியில் மாநில பொது செயலாளர் அச.உமர் பாரூக், ஆலந்தூர் தொகுதியில் மாவட்ட பொது செயலாளர் எம்.முகம்மது தமீம் அன்சாரி, மதுரை மத்தி தொகுதியில் மாவட்ட துணை தலைவர் ஜி.சிக்கந்தர் பாட்ஷா, திருவாரூர் தொகுதியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில பொது செயலாளர் எம்.ஏ.நஸிமா பானு, திருச்சி மேற்கு தொகுதியில் மாவட்ட தலைவர் ஆர்.அப்துல்லா ஹஸ்ஸான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.தொடர்ந்து, வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் சென்னையில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். இதில் தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி, தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத், மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், பொருளாளர் வி.எம்.அபுதாஹிர், மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், அஹமது நவவி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், வழக்கறிஞர் ராஜா முகமது, பஷீர் சுல்தான், ஷஃபிக் அகமது, எஸ்டிடியூ தொழிற்சங்க மாநில தலைவர் முகம்மது பாரூக், வர்த்தக அணி மாநில தலைவர் முகைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்….

Related posts

ஆட்சியில் பங்கு கேட்கும் சூழலே எழவில்லை: திருமாவளவன் பேட்டி

ஆட்சியை காப்பாற்றவே பாஜவுடன் இபிஎஸ் கூட்டணி: அதிமுக அவைத்தலைவர் பேச்சு

ஒரு கோடி இலக்காம்… சேர்ந்ததோ வெறும் அஞ்சு லட்சம்தானாம்… தமிழகத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கையில் கடும் பின்னடைவு: இளைஞர்கள் பெயரளவுக்கு கூட திரும்பிப் பார்க்கவில்லை; பாஜ மேலிட பொறுப்பாளர் கடும் அதிருப்தி