அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் தான் அடுத்த வரவுள்ள கொரோனா அலைகளை தவிர்க்க முடியும் :ராதாகிருஷ்ணன்

சென்னை : பணம் ஈட்டும் நோக்கில் செயல்படுவதை தனியார் மருத்துவமனைகள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் தடுப்பூசிகள் இலவசமாக  செலுத்துவது குறித்து தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,’தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரித்தால் தான் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் தான் அடுத்த வரவுள்ள கொரோனா அலைகளை தவிர்க்க முடியும்.வரும் அலைகளுக்கு அரசு மருத்துவமனைகள் தயாராக இருப்பதை போல தனியார் மருத்துவமனைகளும் தயார்நிலையில் இருக்க வேண்டும். சில தனியார் மருத்துவமனைகள் இந்த நிலையிலும் பணம் ஈட்டும் நோக்கில் உள்ளனர், அதை மாற்றிகொள்ள வேண்டும். மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தனியார் மருத்துவமனைகள் அரசுடன் இணைந்து செயல்பட்டால் தான் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரிக்கும்.தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி இலவசமாக கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’என்றார். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு