அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவு

 

திருப்பூர், ஜன.10: அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 வழங்கிட உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செல்வராஜ் எம்எல்ஏ நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள 2 கோடியே 19 லட்சத்து 75 ஆயிரத்து 268 குடும்ப அட்டை தாரர்களுக்கும், முதல்வர் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கிட உத்தரவிட்டுள்ளார். அதனுடன் பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் விலையில்லா வேட்டி, சேலையும் அந்தந்த ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளது.

மிக்ஜாம் புயல் மற்றும் தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.6000 நிவாரண நிதி வழங்கிய இக்கட்டான பொருளாதார சூழ்நிலையிலும், அனைத்து குடும்பங்களும் பயன்பெறும் வகையில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1000 வழங்கி உத்தரவிட்ட முதலமைச்சருக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர். எனது சார்பாகவும், திருப்பூர் மக்களின் சார்பாகவும் தமிழ்நாடு முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை