அந்தியூர் அருகே மலையில் இருந்து உருண்டு குட்டி யானை பலி

அந்தியூர்: அந்தியூர் அருகே மலைச்சரிவில் சரிந்து விழுந்து 5 வயது ஆண் குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து வன அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்து பர்கூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட காரணமாலை பள்ளம் பகுதியில் பர்கூர் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்‌.  அப்போது, அங்கு ஒரு ஆண் குட்டி யானை இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சதாசிவம், பர்கூர் கால்நடை மருத்துவர்கள் சுரேஷ், பரத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உடற்கூறு ஆய்வு செய்தனர். அப்போது மலைச்சரிவில் யானை குட்டி தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.உயிரிழந்த யானை குட்டிக்கு சுமார் ஐந்து வயது இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்கு பின்பு யானையின் உடல் மற்ற வனவிலங்குகளின் உணவிற்காக அப்படியே விடப்பட்டது. மேலும், யானை குட்டியிடமிருந்து 2 அடி நீளம் உள்ள ஒரு ஜோடி தந்தங்கள் எடுக்கப்பட்டு அவற்றை பர்கூர் வனத்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்….

Related posts

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

கரூர் நில மோசடி வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு நாளை ஒத்திவைப்பு!

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ