அதிமுக சார்பில் நாளை நடப்பதாக இருந்த போராட்டங்கள் 21-ம் தேதிக்கு மாற்றம்

சென்னை: அதிமுக சார்பில் நாளை நடப்பதாக இருந்த போராட்டங்கள் 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவை தொடர்பாக அரசைக் கண்டித்து, அதிமுக ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 13.12.2022 அன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு , திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விருதுநகர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்ய இருப்பதாகக் கிடைத்த தகவலையொட்டி, மேற்கண்ட மாவட்டங்களுக்கு மட்டும் 13.12.2022 அன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அதற்கு பதிலாக வருகின்ற 21.12.2022 – புதன் கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு, அனைத்து ஒன்றியங்களிலும் 14.12.2022 அன்றும்; ஒத்திவைக்கப்பட்ட பேரூராட்சிகளில் 16.12.2022 அன்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து விலகுகிறேன்: நாதக மாவட்ட செயலாளர் சுகுமார்

ராகுல்காந்திக்கு எதிராக பேசினால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம்: செல்வப்பெருந்தகை பேட்டி

தேசிய அளவில் மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும்: ஒன்றிய அரசை வலியுறுத்தி விசிக மகளிர் மாநாட்டில் தீர்மானம்