அதிமுக கூட்டணியில் இணைந்தால் தான் தமிழக பாஜவுக்கு அங்கீகாரம் கிடைக்கும்: ஜெயக்குமார் கருத்து

சென்னை:  2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழக பாரதிய ஜனதா தயாராகி வருகிறது. சென்னையில் நடந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேசும்போது, ‘‘அதிமுக பிளவுபட்டு இருக்கிறது. அக்கட்சி பிரச்சினை தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமி வாழ்க, ஓ.பன்னீர்செல்வம் வாழ்க’’ என்று நாம் அவர்கள் பின்னால் செல்ல தேவையில்லை, தனித்து போட்டியிடுவோம் என்றார். இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணிக்கு நாங்கள் தலைமை வகிக்கிறோம். 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி கட்சி தலைமை முடிவு எடுக்கும். எத்தனை கட்சிகளாக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, எங்களோடு வரும் போதுதான் அவர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும், என்றார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை