‘அதிமுக கணவராம்.. பாஜ மனைவியாம்.. புது குண்டை தூக்கி போட்ட பொதுச்செயலாளர் சீனிவாசன்

திருமங்கலம்: அதிமுகவும், பாஜவும் கணவன், மனைவி மாதிரி என பாஜ பொதுச்செயலாளர் சீனிவாசன் பேசினார். மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் அதிமுக தனித்து போட்டியிடுகிறது. இந்நகராட்சியில் 26 வார்டுகளில் பாஜவும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பாஜ பொதுச்செயலாளர் சீனிவாசன் திருமங்கலத்தில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், ‘திருமங்கலத்தில் ஒரேயொரு வார்டை தவிர்த்து அனைத்து வார்டுகளிலும் அதிமுகவுக்கு இணையாக பாஜ  போட்டியிடுகிறது. ஒரு வீட்டில் கணவன் – மனைவி இருந்தால், மனைவியின் பலம் இரண்டு நாட்கள் அவர் வெளியூர் சென்ற பின்தான் கணவருக்கு தெரியவரும். இதேபோல் அதிமுகவிற்கு எங்கள் பலம் வரும் தேர்தலில் தெரியவரும். எனவே அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுகிறோம்’ என்றார். அதிமுகவும் பாஜவும் கணவன், மனைவி என்ற தோரணையில் பாஜ பொதுச்செயலாளர் சித்தரித்து பேசியது குறிப்பிடத்தக்கது.* பாஜவால் தோற்றோம்: நடுங்கும் குளிரில் அதிமுக மாஜி அனல் பேச்சுகொடைக்கானலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நத்தம் விஸ்வநாதன் பேசும்போது, ‘‘கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோற்றதற்கு நாங்கள்தான் காரணம். நாங்கள் அமைத்த கூட்டணி (பாஜ) மற்றும் பல்வேறு நடவடிக்கைகளால் தோற்கும் நிலை ஏற்பட்டு ஆட்சியை இழந்தோம்’’ என்றார். உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே தனித்து போட்டி, மற்றபடி அதிமுகவுடன் கூட்டணியில்தான் உள்ளோம் என பாஜ கூறி வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…