அதிமுக ஆட்சியில் கடைசியில் போட்டது நான்கு மாதம்கூட தாங்காத சாலை-மழையால் சேதமடைந்தது

திருப்புவனம் : திருப்புவனம் அருகே நான்கு மாதங்களுக்கு முன் அதிமுக ஆட்சியின் இறுதியில் போடப்பட்ட கிராமச்சாலை சமீபத்தில் பெய்த மழைக்கு சேதமடைந்துள்ளது.திருப்புவனம் அருகே தேளி விலக்கு ரோட்டிலிருந்து கணக்கன்குடி வரை 3 கிமீ தூரம் பல லட்சம் செலவில் கடந்த அதிமுக ஆட்சியின் கடைசியில் அவசர கதியில் சாலை போடப்பட்டது. இந்த சாலை தற்போது பெய்த மழையால் பல இடங்களில் சேதமாகி உள்ளது. சிறுபாலம் முறையாக போடாததால் சேதமாகி உள்ளது. சாலையின் இரு ஓரங்களிலும் கொட்டப்பட்ட மண்ணை பரத்திவிடாமல் கிடப்பதால், அந்த மண் மழையில் கரைந்து தார் ரோடு மண் ரோடாக மாறிவிட்டது என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பணிகளை அரைகுறையாக மேற்ெகாண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்….

Related posts

பெற்றோரை திருமணமான அரசு ஊழியரின் காப்பீட்டு திட்டத்தில் குடும்ப உறுப்பினராக சேர்ப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளச்சாராயத்தை ஒழிக்க கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்: ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால அவகாசம் 31ம் தேதி வரை நீட்டிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் அறிவிப்பு