அதிமுக ஆட்சியில் இடிக்கப்பட்ட 3 விஏஓ அலுவலகங்களை கட்டுவது எப்போது? வருவாய்த்துறை அமைச்சருக்கு மனு

 

விருதுநகர், அக். 14: விருதுநகர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் காளிதாஸ் வருவாய்த் துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில், விருதுநகர் மதுரை ரோட்டில் சிறைச்சாலை வளாகத்தில் விருதுநகர், கோட்டைப்பட்டி, அல்லம்பட்டி பகுதிகளுக்கான கிராம நிர்வாக அலுவலகங்கள் இயங்கி வந்தது. புதிதாக அலுவலகம் கட்ட இருப்பதாக கூறி 3 விஏஓ அலுவலங்களும் இடித்து அகற்றப்பட்டன. இதுவரை புதிய அலுவலகங்கள் கட்ட நிதி ஒதுக்கப்படவில்லை.

நிதி ஒதுக்கும் முன்பாக அதிமுக ஆட்சி யில் கட்டிடங்களை இடிக்கப்பட்டதன் அவசியம் என்ன என்று புரியவில்லை. நகரின் முக்கிய இடத்தில் 3 விஏஓக்கள் அலுவலகங்கள் செயல்பாட்டில் இருந்தது பொதுமக்களுக்கு வசதியாக இருந்து வந்தது. தற்போது திசைக்கு ஒன்றாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் விஏஓ அலுவலங்களை தேடி அலையும் அவல நிலை தொடர்கிறது. இடிக்கப்பட்ட விஏஓ இடத்தில் புதிய அலுவலகங்களை கட்ட நிதி ஒதுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை