அதிக லாப ஆசை காட்டி விவசாயி முதலீடு செய்த ரூ.9.25 லட்சம் மோசடி

தஞ்சாவூர்: இணையவழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி விவசாயியிடம் ரூ.9.25 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தை சேர்ந்த 35 வயது விவசாயியிக்கு மே மாதம் வாட்ஸ் ஆப் மூலம் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய மர்ம நபர் இணையவழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, வங்கிக் கணக்கு எண்ணையும் அனுப்பினார். இதை நம்பிய விவசாயி அந்தநபர் கூறிய வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பினார். ஆனால், மர்ம நபரிடமிருந்து எந்தவித லாபத் தொகையும் வரவில்லை. இதனால், வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபரை விவசாயி தொடர்பு கொண்டார். அப்போது, மேலும் பணம் செலுத்தினால், முன்பு செலுத்திய தொகைக்கும் சேர்த்து லாபம் அனுப்புவதாக மர்ம நபர் கூறினார். இதனால், விவசாயி மே 22ம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.9.25 லட்சம் வரை மர்ம நபருக்கு பணம் அனுப்பியுள்ளார். அதன் பிறகும் எந்தவித பதிலும் இல்லாததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விவசாயி, தஞ்சாவூர் சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் நேற்று போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’