அதிக பாரம் ஏற்றிச்சென்ற 10 லாரிகளுக்கு ரூ. 4.10 லட்சம் அபராதம்

புழல்: திருவள்ளூர் மாவட்டத்தில்  கனரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றி செல்வதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனை தவிர்க்கும் விதமாக அதிகபாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அதிகபாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள் குறித்து திடீர் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது.அதன்படி சோழவரம், ஜனப்பன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் தலைமையில்,  மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பைய்யன், ராஜராஜேஸ்வரி குழுவினர் நேற்று முன்தினம் மாலை ஆய்வு நடத்தினர். அப்போது மணல், செம்மன், ஜல்லி, சாம்பல் கழிவு, எம்சாண்ட் என பல்வேறு வகையிலான சரக்குகளை ஏற்றிச்சென்ற லாரிகள் அதிக பாரத்துடன் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து  10 லாரிகளுக்கு ரூ. 4.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வாகன தகுதிச்சான்று, உரிய அனுமதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 5 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், தகுதி சான்று ரத்து செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் எச்சரித்துள்ளார்….

Related posts

கூடலூரில் பழுதடைந்து கிடக்கும் நகராட்சி கட்டண கழிப்பறையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை

‘நான் முதல்வன் உயர்வுக்கு படி’ திட்டம் மூலம் உயர்கல்வியில் சேர்ந்து வாழ்வில் மேம்பட வேண்டும்

கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம் ₹73 லட்சத்தில் நகராட்சி பூங்கா புதுப்பிப்பு