அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா பிரதமர் மோடி முதல்வர் பங்கேற்பு

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். அண்ணா பல்கலைக் கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில்  இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடக்கும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்துகிறார். தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் கவுரவ விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இவர்கள் தவிர ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரும் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் அண்ணா பல்கலை  மற்றும் அதில்  இணைப்பு பெற்றுள்ள 500 பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டில் பிஇ, பிடெக் மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளை படித்து தேர்ச்சி பெற்ற சுமார் 1 லட்சம் மாணவ மாணவியர் பட்டம் பெற உள்ளனர். அவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்குவார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை