‘அண்ணண்’ என அழைத்து முதல்வருக்கு கடிதம் எழுதிய சூலூர் அதிமுக எம்எல்ஏ: கட்சி மாறுகிறாரா? என அதிமுகவினரிடையே சலசலப்பு

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வாரப்பட்டி கிராமத்தில் டிட்கோ சார்பில் ராணுவ தளவாட தொழில் பூங்கா அமைக்க உத்தேசிக்கப்பட்டு தமிழக அரசு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் சிலர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2வது நாளான நேற்று சூலூர் அதிமுக எம்எல்ஏ வி.பி. கந்தசாமி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தை மக்களிடம் காட்டினார். அதில், ‘‘மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் அவர்களுக்கு’’ என குறிப்பிட்டு எழுதி இருந்தார். அதிமுக எம்எல்ஏ ஒருவர் முதல்வரை அண்ணன் என அழைத்து கடிதம் எழுதி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பொது நிகழ்ச்சியில் பேசிய கந்தசாமி எம்எல்ஏ, ‘‘சின்னங்கள்தான் வேறு எண்ணங்கள் ஒன்றுதான்’’ என்று கூறியிருந்தார். அப்போதே எம்எல்ஏ கட்சி மாறுகிறாரா? என்று பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது அண்ணன் என்று உறவு முறையில் கடிதம் எழுதியது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. …

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்