அணைக்கட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜல்லி கட்டுக்கு தயாராகும் காளைகள்-அனுமதி வழங்க கோரிக்கை

அணைக்கட்டு : வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் தமிழர் திருநாளம் பொங்கல் பண்டிகை மற்றும் அதனை தொடர்ந்து நடத்தப்படும் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு காளைவிடும் விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்திலேயே அணைக்கட்டு தாலுகாவில் மட்டும் தான் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் காளைவிடும் விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் காளைவிடும் விழாவுக்கு அனுமதி கேட்டு பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் தாசில்தாரிடம் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் காளை மாடுகளை வளர்ப்போரும் மாடுகள் போட்டியில் பங்கேற்பதற்கு வேண்டிய பயிற்சிகளை அளித்து வருகின்றனர். இதில் ஊசூர், அத்தியூர், சிவநாதபுரம், கலங்கமேடு சுற்றியுள்ள பகுதியில் இளைஞர்கள் காளை வளர்ப்போருடன் இணைந்து மாட்டிற்கு மண்ணை குத்தி சீறுதல், சீறி பாய்ந்து ஓடுதல், நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து  வருகின்றனர். மேலும் போட்டிகளில் பங்கேற்கும் மாட்டிற்கு பல ஆயிரக்கணக்கில் செலவு செய்து சத்தான தீவனங்களை வழங்கி மாட்டை தயார்ப்படுத்தி வருகின்றனர். காளை விடும் விழாவுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் போட்டியில் பங்கேற்கும் மாடுகளுக்கு எப்படி யாரிடம் அனுமதி வாங்குவது என தெரியாமல் தவித்து வருகின்றனர். குறுகிய காலகட்டத்தில் அனுமதி கிடைக்காத மாடுகள் விழாக்களில் பங்கேற்க தடை விதிப்பதால் அவர்கள் இத்தனை நாட்கள் பயிற்சி அளித்தது வீணாகிவிடுவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விழா நடத்தும் கிராம மக்கள், காளை வளர்ப்போர்கள் கூறியதாவது: அணைக்கட்டு தாலுகாவை பொறுத்தவரை முதல் நாள் தைபொங்கல் தினத்தன்றே காளைவிடும் விழாக்கள் நடத்தபடுவது ஆண்டாண்டாக நடந்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்றும் 16 நாட்களே உள்ள நிலையில் ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது,  மற்ற துறைகளில் தடையின்மை சான்று எப்படி வாங்குவது என தெரியாமல் உள்ளோம். மேலும் அவ்வாறு விண்ணப்பித்தால் நாங்கள் நடத்தும் அதே தினத்திலே மாடுவிடும் விழாக்கள் நடத்த அனுமதி கிடைக்குமா என குழப்பத்தில் உள்ளோம். இதனால் பரிசு பொருட்கள் தயார் செய்வது, நோட்டிஸ் அச்சடிப்பது உள்ளிட்ட பணிகளும் தாமதமாகி வருகிறது. அதேபோல் காளை வளர்ப்பவர்களும் போட்டியில் மாடுகள் பங்கேற்பதற்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்தால் விரைவாக அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர். …

Related posts

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நிபந்தனைகள் திரும்ப பெறப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகம் தகவல்

பல கல்வி நிறுவனங்களில் பல்கலை விதியை பின்பற்றாமல் பேராசிரியர்கள் நியமனம்: மக்கள் கல்வி இயக்ககம் குற்றச்சாட்டு

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு கணவர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை