அணியின் வெற்றிக்கு பங்களிப்பது எப்போதும் ஒரு பெரிய உணர்வு: பும்ரா பேட்டி

பெங்களூரு: இந்தியா-இலங்கை அணிகள் இடையே 2வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா முதல் இன்னிங்சில் 252, இலங்கை 109 ரன் எடுத்தன. 143 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 447 ரன் இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை நேற்றைய 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒருவிக்கெட் இழப்பிற்கு 28 ரன் எடுத்திருந்தது. இன்று பேட்டிங்கை தொடர்ந்தது.நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அளித்த பேட்டி: எல்லோரும் ஒரே மாதிரியாக விளையாட முடியாது. ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விளையாட்டுத் திட்டம் உள்ளது. அதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ரிஷப் பன்ட் தனது வழக்கமான பாணிக்கு திரும்பியுள்ளார். இயற்கையாகவே அவர் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்யக் கூடியவர். அவர் இன்னும் இந்த விளையாட்டைப் பற்றி அனுபவத்தையும் கற்றுக்கொள்கிறார். அவரது திட்டம் (தாக்குதல்) முன்னோக்கி செல்வது, அது எங்களுக்கு சாதகமான அறிகுறியாகும், என்றார்.மேலும் சொந்த மண்ணில் முதல் முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது குறித்து பேசிய பும்ரா, இது நன்றாக இருந்தது, மூன்று வடிவங்களிலும் விளையாடும்போது உடலையும் உங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் நீங்கள் சொந்த மண்ணில் விளையாடுவதைத் தவற விடுவீர்கள். இந்த நேரத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அணியின் வெற்றிக்கு பங்களிப்பது எப்போதும் ஒருபெரிய உணர்வு, என்றார்.எனது பேட்டிங்கால் மகிழ்ச்சிஹனுமா விஹாரி கூறுகையில், பிட்ச் இது மிகவும் சவாலானது. எந்த பந்திலும் விக்கெட் விழும் வகையில் உள்ளது. நாளையும் (இன்று) இலங்கைக்கு சவாலாக இருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் நான் இன்னும் பொறுமையைக் காட்டியிருக்கலாம். இருப்பினும், நான் பேட்டிங் செய்த விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் இன்றிரவு (நேற்று) பந்துவீச திட்டமிடவில்லை. ஆனால், விக்கெட்டுகள் சரிந்ததால், நாங்கள் 35-40 நிமிடங்கள் பந்துவீசி இலங்கை விக்கெட்டுகளை வீழ்த்தி கடினமாக்க முடியும் என்று உணர்ந்தோம், என்றார்….

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இன்று முதல் தொடக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் டி20 உலக கோப்பை இன்று கோலாகல தொடக்கம்: சாதிக்கும் முனைப்பில் இந்தியா

சென்னையில் இளைஞர் டெஸ்ட் இந்தியா யு-19 வெற்றி