அடுத்த 2 நாட்கள் தமிழகத்தில் வெயில் சதத்தை தாண்ட போகிறது.. மக்கள் வெளியே செல்ல வேண்டாம் : வானிலை மையம் வார்னிங்

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழகத்தில் இன்று தி.மலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். திருப்பத்தூர் , வேலூர், திருச்சி  மாவட்டங்களிலும் இன்று 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்வதால் அனல்காற்று வீசும். 5,6 தேதிகளில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில் 5 வரை வெப்பநிலை உயரக்கூடும். தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது. வெயில் கொளுத்துவதால் பகல் 12 முதல் மாலை 4 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.வளிமண்டல சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்துக்குள் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதுதெற்கில் இருந்து தரைக்காற்று தமிழகம் நோக்கி வீசுவதால் தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது. நேற்று 9 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது.9 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டியது.வேலூர்,திருத்தணி,திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு,தர்மபுரி, திருப்பத்தூர்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்