அடுத்த மாதம் முதல் தொடக்கம் குதிரை பந்தயத்திற்கு தயாராகும் ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானம்

ஊட்டி: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்தாண்டு ஊட்டி குதிரை பந்தயம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு பந்தயத்திற்காக ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் தயராகி வருகிறது. சுற்றுலா நகரமான ஊட்டியில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை பந்தய மைதானத்தில் குதிரை பந்தயம் நடக்கும். இதில் கலந்து கொள்வதற்காக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து குதிரைகள் வரவழைக்கப்படும். கோடையில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த குதிரை பந்தயத்தை கண்டு ரசித்து செல்வது வழக்கம். இதனிடையே, கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் ஊட்டியில் குதிரை பந்தயம் நடைபெறவில்லை. இதனிடையே, இந்தாண்டுக்கான கோடை சீசன் துவங்க உள்ள நிலையில், குதிரை பந்தயமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரேஸ்கோர்ஸ் நிர்வாகம், குதிரை பந்தயம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. தற்போது, வெளி மாநிலங்களில் இருந்து வரும் குதிரைகள் தங்குவதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர, ஓடுதளமும் சீரமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் குதிரை பந்தயம் துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.     …

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு