அடுத்த ஐபிஎல் அணி ரெடி அகமதாபாத் டைட்டன்ஸ்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 புதிய அணிகள்  இந்த ஆண்டு முதல் களம் காண உள்ளன. அதன் மூலம் ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. புதிய அணிகளாக லக்னோ, அகமதாபாத்  ஆகியவற்றில்  லக்னோ அணி பெயர் வைப்பு, வீரர்கள் தேர்வில் முந்திக் கொண்டது. லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தேர்வான நிலையில், கடந்த மாதமே  அணியின் பெயர் ‘லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மண்ணின் மைந்தர் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக தேர்வு செய்திருந்த அகமதாபாத் அணி பெயர் வைப்பதில் தாமதம் செய்து வந்தது. ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் பிப்.12, 13 தேதிகளில் நடைபெற உள்ளதால்அகமதாபாத் அணியும்  பெயரை  நேற்று இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி ‘அகமதாபாத் டைட்டன்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெயருக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில்,  அணிக்கான முத்திரை வெளியிடப் படவில்லை. அணிக்கான பெயர், முத்திரை, வீரர்கள் தேர்வில்  பரபரப்பாக இருப்பதால் ஹர்திக்   நாளை மறுதினம் தொடங்கும் ரஞ்சி தொடரில் விளையாடவில்லை. அதற்கேற்ப வழக்கமாக அவர் விளையாடும் பரோடா அணி நேற்று வெளியிட்ட பட்டியலில் ஹர்திக் பெயர் இல்லை. க்ருணால் பாண்டியாவுக்கு பதில் கேதர் தேவதார் கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார்….

Related posts

பைனலில் கோகோ – முச்சோவா; சீனா ஓபன் டென்னிஸ்

மகளிர் உலக கோப்பை டி20ல் இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல்

இந்தியா வங்கதேசம் பலப்பரீட்சை; குவாலியரில் இன்று முதல் டி20 போட்டி: இரவு 7.00 மணிக்கு தொடக்கம்