அஞ்சுகிராமத்தில் வாகன சோதனை டிராபிக் எஸ்ஐ.,யை இடித்து தள்ளிவிட்டு தப்பிய வாலிபர் கைது

அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் அருகே காணிமடம் விலக்கு பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜாய்சன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தலைக்கவசம் மற்றும் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை போலீசார் சைகை மூலம் நிறுத்துமாறு கூறினர். ஆனால் அந்த வாலிபர் வாகனத்தை நிறுத்தாமல் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பிக்க முயன்று தொல்லவிளையைச் சேர்ந்த போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ சசிகுமார் (52) என்பவர் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த சசிகுமாரை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போக்குவரத்து போலீசார் மீது இடித்து தள்ளி விட்டு நிற்காமல் சென்ற வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் சசிகுமார் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர் விசாரணையில் அந்த வாலிபர் கருங்குளத்தை சேர்ந்த குமார் மகன் வேல்முருகன்(20) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய அரசு பஸ்: கடும் போக்குவரத்து நெரிசல்

திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்; நெடுந்தூர சிறப்பு ரயில்கள் கன்னியாகுமரிக்கு வருமா?: பயணிகள் எதிர்பார்ப்பு