அச்சுறுத்தும் புதியவகை கொரோனா…! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 1.04 கோடியை தாண்டியது: 1.50 லட்சம் பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.04 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 18,222 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,04,31,639 ஆக உயர்ந்தது.* புதிதாக 228 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,50,798 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 19,253 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 1,00,56,651 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,24,190 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 96.39% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.16% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் ஒரே நாளில் 9,16,951 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.* இதுவரை 18,02,53,315 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது….

Related posts

அம்பானி வீட்டு திருமணத்தால் ஊழியர்களுக்கு Work From Home வழங்கிய IT நிறுவனங்கள்..!!

செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்: மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர் என மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றம் அதிரடி