அகிம்சை – சகோதரத்துவத்தை சமுதாயத்துக்கு கற்பித்தவர் மகாத்மா காந்தியடிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அதன் ஒரு பகுதியாக சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியின் உருவச்சிலைக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, காந்தியின் சிலைக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள அவரின் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன், மா சுப்பிரமணியன், காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அகிம்சை – சகோதரத்துவம் என மானுட சமுதாயத்திற்கு இன்றியமையாத பண்புகளை வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்து நமக்குக் கற்பித்த மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள்!. தேசத் தந்தை காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும்!. சகோதரத்துவத்தை வளர்ப்போம்!…

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்