அகவிலைப்படியை உயர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: அரசு ஊழியர், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அறிக்கை

திருவள்ளூர், அக். 27: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்குகிறதோ அப்போதெல்லாம் அதே தேதியிட்டு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். கலைஞர் எப்படி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காவலராக திகழ்ந்தாரோ, அதே வடிவில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார் என்பதன் பறைசாற்றும் விதமாக 16 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 42 விழுக்காடாக இருந்த அகவிலைப்படியை 46 விழுக்காடாக உயர்த்தி, ஜூலை மாதம் 1ம் முன் தேதி யிட்டு வழங்கி இருக்கின்றார். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி