மேஷம்
பதிவு செய்த நேரம்:2013-06-17 09:49:57ஜூன் 16 முதல் 22 வரை - திருக்கோவிலூர் கே.பி.ஹரிபிரசாத் சர்மா
நினைத்ததை முடிக்கும் வரை ஓயாது செயல்படும் மேஷ ராசி மாதரசியரே... இந்த வாரத்தில் லேசான மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். பண வரவு சீராக இருந்து வரும். பேச்சினில் சற்று கடுமையான வார்த்தைகள் வெளிப்படக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் பணிச்சுமையை வெகுவாகக் குறைக்கும். அடுத்த வீட்டுப் பெண்களால் ஒரு சில பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். முன்பின் தெரியாத நபர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. 21, 22 தேதிகளில் பிரயாணத்தைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை. சிந்தனையில் இருந்து வரும் குழப்பம் சுறுசுறுப்பைக் குறைக்கும். சோர்வினால் உடல்நிலையில் லேசான சிரமம் உண்டாகும். கணவர் உங்கள் மன நிலையைப் புரிந்துகொண்டு சாதகமாக நடந்து கொள்வார். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோருடன் வீண் மனஸ்தாபம் கொள்ள நேரிடலாம். மாணவியர் 19, 20 ஆகிய தேதிகளில் தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறக் காண்பர். சந்தேகமான மனநிலையால் சங்கடத்திற்கு ஆளாகும் வாரம் இது.
சந்திராஷ்டமம்: 21, 22 தேதிகளில் நிதானம் அவசியம்.
பரிகாரம்:
தட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபட்டு வரவும்.








