ஏப்ரல் 1ந் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் : டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்
கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:3/23/2013 10:32:04 AM
நாமக்கல்: டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 1ந் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட லாரி உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். டீசல் விலை லிட்டருக்கு 45 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. இந்த விலை உயர்வு லாரி உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, டீசல் விலை உயர்வை கண்டித்தும் மற்றும் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 1ந் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. தமிழகம் பொறுத்த வரையில் 5 லட்ச லாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறது. மேலும் இந்த போராட்டம் திட்டமிட்டப்படி நடக்கும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளன.
Namakkal: diesel price hike protest indefinite strike from midnight on April 1 truck owners planned. 45 bucks to the price per liter of diesel oil companies announced yesterday. The price increase caused shock among truck owners. Consequently, the prices of diesel and criticism, and to set the right price for oil companies, and has emphasized the need to get back to midnight on April 1 indefinite strike across the country, there are trucks. For here is the 5 million trucks involved in the strike. Lorry Owners Association announced that the fight will take place as scheduled.




















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!