Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ராமேஸ்வரம் கோயிலில் அறிமுகம் தீர்த்தமாடும் பக்தர்களுக்கு அடையாள காப்பு கயிறு

கருத்துகள்


MORE VIDEOS

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடும் பக்தர்களின் வசதிக்காக, அவர்களின் கைகளில் அடையாள காப்பு கட்டப்படும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக கொண்டு வரப்படும் இந்த திட்டத்தை ராமநாத சுவாமி கோயிலில் அமைச்சர் ஆனந்தன் துவக்கி வைத்தார்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்தமாடும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது, ஒருமுறை வழங்கப்பட்ட தீர்த்த டிக்கெட்டை மீண்டும் கவுண்டரில் பக்தர்களிடம் தருவது, டிக்கெட்டை மொத்தமாக பெற்று தீர்த்தமாட அனுமதிப்பது போன்ற மோசடி செயல்கள் கடந்த காலங்களில் நடந்தன.இதனால் பக்தர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தவிர்க்க அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, தீர்த்தமாடும் பக்தர்களை அடையாளம் காணும் வகையில் கட்டணம் செலுத்தும் பக்தர்களின் கையில் அடையாள காப்பு (டேக்) அணிவிக்க முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்திலேயே முதல் முறையாக ஹைடெக் முறையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன், கலெக்டர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து கோயிலுக்குள் 7 கோடி ரூபாய் செலவில் நடந்து வரும் அன்னதான கூடம் கட்டும் பணி, மூன்றாம் பிரகாரம் வர்ணம் தீட்டும் பணி, கோயில் வடக்கு, தெற்கு கோபுர பணி, பக்தர்கள் தங்குவதற்கான ஓய்வறை கட்டுமான பணி ஆகியவற்றை அமைச்சர் ஆனந் தன் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘13வது நிதி திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாய், திருக்கோயில் உபயதாரர் நிதி 5 கோடி ரூபாய் செலவில் கோயிலில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்திலேயே முதல் முறையாக பக்தர்களின் கைகளில் இந்த அடையாள காப்பு அணியும் முறையால் பக்தர்கள் சிரமம் இன்றி புனித நீராடலாம்‘, என்றார்.

Tirttamatum in Rameswaram for the convenience of devotees, they introduced the new system in the hands of identity protection is built. Tamilakattileye
தொடர்புடையவை

மேலும்

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

18

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பொறுப்பு
ஆன்மிகம்
நன்மை
ஆதரவு
உற்சாகம்
சகிப்புத்தன்மை
சோர்வு
மன உறுதி
கடமை
முக்கிய முடிவு
பிரச்னை
செல்வாக்கு
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran