கோவை குடியிருப்பு பகுதியில் மீண்டும் யானைகள் முற்றுகை
கருத்துகள்
கோவை: கோவை தொண்டாமுத்தூர் ஓணப்பாளையம் வனத்தில் இருந்து நேற்று முன் தினம் 2 குட்டிகளுடன் 5 யானைகள் காளம்பாளையத்தில் ஒரு தோட்டத்திற்குள் புகுந்தன. அங்கு தென்னை மரங்களை சாய்த்து நாசம் செய்தன. வனத்துறையினர் பட்டாசு வெடித்து விர ட்ட முயன்றனர். இந்நிலை யில் யானைகள் குடியிருப்புகளை நோக்கி சென்றன. வீடுகளை சுற்றிய யானைகள் பேரூர் மெயின் ரோட்டில் இரவு நேரத்தில் புகுந்தன. யானைகள் நடமாட் டத்தால் ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. யானைகளை ரோட்டில் ஓட விட்டு மாதம்பட்டி வரை விரட்டினர். நள்ளிரவு நேரத்தில் மாதம்பட்டி 4 ரோடு சந்திப்பில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தீப்பந்தத்துடன் குவிந்தனர். தீ பந்தங்களை பார்த்த யானைகள் நடுரோட்டில் மிரட்சியுடன் நின்றன. அப்போது பட்டாசு வெடித்தபோது திடீரென காளம்பாளையம் நோக்கி ஓடின. விடிய, விடிய வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். வெடி சத்தம் தாங்க முடியாமல் யானைகள் மீண்டும் மாதம்பட்டி வழியாக வனத்துக்குள் புகுந்தன. மதுக்கரை, கோவைப்புதூர், காளம்பாளையம், ஆலாந்துறை பகுதியில் யானைகள் சுற்றி கொண்டிருப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!