Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அமெரிக்க கடன் பத்திர விவகாரம்

தாராபுரம் கடலை வியாபாரி சொத்துகள் திடீர் முடக்கம்

கருத்துகள்


MORE VIDEOS

தாராபுரம்: தாராபுரம் கடலை வியாபாரி யின் வீட்டில் 27500 கோடி மதிப்பிலான அமெரிக்க கடன் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஈரோடு வருமானவரித் துறையினர் கடலை வியாபாரி ராமலிங்கத்தின் அனைத்து சொத்துக்களையும் முடக்கி வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்புத்துறைபாளையத்தைச் சேர்ந்த கடலை வியாபாரி ராமலிங்கத்தின் வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அமெரிக்காவில் உள்ள இன்டர் நேஷனல் பில் ஆப் எக்சேன்ஜில் (கடன் பத்திரம்) முதலீடு செய்யப்பட்ட 5 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 5 பில்லியன் (யுஎஸ்ஏ) டாலர்கள். இந்திய முகமதிப்பு தொகை ஸீ27,500 கோடி. அதன் பிறகு இந்த ஆவணங்கள் போலியானது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து ராமலிங்கத்திடம் விசாரணை நடைபெற்று வந்தது. அதிகாரிகள் தன்னுடைய வீட்டில் இருந்த உண்மையான ஆவணங்களை விதிமுறைகளுக்கு புறம்பாக எடுத்துச் சென்றதோடு திருப்பித் தர மறுப்பதாகவும் இதனால் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராமலிங்கம் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் கடந்த 15ம் தேதி தாராபுரம் நடுவர் நீதிமன்றத்தில் இது குறித்து மனு தாக்கல் செய்தார். விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட், மனுவை தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் ராமலிங்கத்தின் சொத்து க்களையும், வங்கியில் இருந்த கடனீட்டுப் பத்திரங்களையும் முடக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. சொத்துக்கள் முடக்கப்பட்டது குறித்து தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கம் கூறியதாவது: எனது சொத்துகள் குறித்து வில்லங்கம் சரிபார்க்க முயற்சித்தபோதுதான் ஈரோடு வருமானவரித் துறை அலுவகத்தின் மூலம் கடந்த 28.2.2013 அன்று தாராபுரம் சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட, எனக்கு சொந்தமான தாராபுரம் பழனி சாலையில் இருக்கும் 0.62 ஏக்கர் நிலத்தில் உள்ள குடியிருக்கும் வீடு, கடலை அரவை ஆலை மற்றும் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வரும் இடம் ஆகியவற்றை முடக்கி இருப்பது தெரியவந்தது. மேலும் வங்கியில் இருந்த ஸீ12 லட்சத்திற்கான கடனீட்டுப் பத்திரங்கள் வைப்பு திட்டத்தில் இருந்ததையும் முடக்கி உள்ளனர்Õ என்று கூறினார்.

27500 crore in Dharapuram sea merchant's house in the February issue of U.S. debt securities confiscated
தொடர்புடையவை

மேலும்

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran