Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

டெல்லி சர்வதேச விமான நிலையத்துக்கு ரூட்ஸ் ஏசியா விருது

கருத்துகள்


MORE VIDEOS

புதுடெல்லி: இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை இயக்கி வரும் டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு உயரிய விருது கிடைத்துள்ளது.ரூட்ஸ் ஏசியா என்ற மாநாடு ஆண்டுதோறும் ஆசிய நாடுகளில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த மாநாடு அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விமான நிலையங்களின் நிர்வாகம், விமான நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். எதிர்காலத்தில் விமான போக்குவரத்தை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் ஆய்வு செய்யப்பட்டது.இந்த மாநாட்டில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அதிக அளவு பயணிகள் பயன்படுத்தியதற்காக, ரூட்ஸ் ஏசியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது. நிறுவனத்தின் தலைவர் கிரன் ஜெயின் விருதை பெற்றார்.இதுகுறித்து டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், Ôஇந்த பெருமை பெற பாடுபட்ட நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் சிஇஓ பிரபாகர ராவ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோன்ற பணியை அனைவரும் தொடர வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற பல்வேறு இலக்குகளை அடைந்து வெற்றி பெற வேண்டும் என்று அவர் விடுத்துள்ள பாராட்டு செய்தியில் கூறியுள்ளார்Õ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indira Gandhi International Airport, Delhi International Airport will drive the company's highest award
தொடர்புடையவை

மேலும்

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran