257 பேர் பலிக்கு காரணமான குற்றவாளிகளில் ஒருவனுக்கு மட்டும் தூக்கு தண்டனையா?
கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:3/23/2013 5:20:23 AM
மும்பை: மும்பை நகரில் 12 இடங்களில் குண்டுவெடிப்பு நடத்தி 200க்கும் அதிகமான அப்பாவி மக்கள் பலியாக காரணமான குற்றவாளிகளில் ஒருவருக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மும்பைவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.மேலும் தொடர் குண்டுவெடிப்பு நடந்து 20 ஆண்டுகள் ஆகியும் காயம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு இன்னும் கிடைக்காதது அதைவிட கொடுமை என 1993 குண்டுவெடிப்பில் காயம் அடைந்த கிருதி அஜ்மிரா (55) என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். 1993ல் நடந்த குண்டு வெடிப்பின்போது மும்பை பங்குச் சந்தையிலும் குண்டு வெடித்தது. அதில் அஜ்மிரா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். கட்டிட பில்டரான அஜ்மிரா 40 ஆபரேஷன்கள் செய்து தனது உயிரை தக்கவைத்துள்ளார்.குண்டுவெடிப்பு நடந்த போது காயம் அடைந்தவர்களுக்கு ஸீ 25 ஆயிரம் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. அந்த இழப்பீடு தொகை 20 ஆண்டுகள் கடந்தும் அஜ்மிராவுக்கு இன்னும் கிடைக்கவில்லை.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேட்ட அஜ்மிரா, 257 பேர் சாவுக்கு காரணமானவர்களில் ஒருவருக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது வியப்பாக இருக்கிறது என குற்றம் சாட்டினார்.பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்த அரசு என்னைப் போன்று காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு இன்னும் வழங்கவில்லை. அதனால் அந்த இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
குண்டுவெடிப்பில் காயம் அடைந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர் கூறியதாவது:1993, மார்ச் 12 ம் தேதி பங்குச் சந்தை கட்டிடத்துக்கு சென்றபோது திடீரென குண்டுவெடித்தது. அதன் பின் சிறிது நேரம் சுயநினைவில்லாமல் கிடந்தேன். நினைவு திரும்பி விழித்து பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் பிணங்களாக கிடந்தது. காயம் அடைந்த சிலர் உதவிகேட்டு கத்தினார்கள். காயம் அடைந்த நான் டாக்சி பிடித்து ஜி.டி. மருத்துவமனை சென்றேன். அங்கு படுக்கை காலி இல்லை எனக்கூறி என்னை அனுமதிக்கவில்லை. அதனால் இன்னொரு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு நான் செல்வதற்கும் சற்று முன்னதாக காயம் அடைந்த ஒருவர் இறந்ததால் அந்த படுக்கையில் என்னை அனுமதித்து சிகிச்சையளித்தனர். குண்டுவெடித்ததில் எனது வலது கை, கால், உடலின் ஒருபகுதி பலத்த காயம் அடைந்தது. அத்துடன் காதும் கேட்காமல் ஆகிவிட்டது. அதை குணப்படுத்த 40 ஆபரேஷன்கள் செய்தேன். அதற்கு ஸீ 30 லட்சத்துக்கும் மேல் செலவு செய்தேன். அப்படி இருந்தும் அரசு அறிவித்த தொகையைக்கூட இன்னும் தரவில்லை. நான் மட்டும் இன்றி என்னைப் போன்ற பலர் இது போன்று பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகின்றனர். குறைந்த பட்சம் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய இழப்பீடாவது கிடைக்க கோர்ட் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!