மகாராஷ்டிராவில் கொடூரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுமிகள் பலாத்காரம்
1கருத்துகள்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் வசாயில் 13, 11, 10, 9 மற்றும் 7 வயது நிரம்பிய சகோதரிகளை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் தினக் கூலிகளாக வேலை பார்த்து வருகிறார்கள். பகலில் வேலைக்கு சென்று விடுவார்கள். அப்போது மூத்த மகள்தான் வீட்டில் இருந்து தங்கைகளை கவனித்துக் கொள்வாள். சிறுமிகளின் சித்தப்பா ரியல் எஸ்«ட்ட் ஏஜெண்டாக இருக்கிறார். பகல் நேரத்தில் சிறுமிகளை பார்க்க அவர்களின் வீட்டுக்கு அவ்வப்போது வருவார். அப்போது அந்த கொடூர ஆசாமி தன் அண்ணன் மகளான 13 வயது நிரம்பிய சிறுமியை குறிவைத்துள்ளார். செலவுக்கு பணம் கொடுத்தும் சாக்லெட் வாங்கி கொடுத்தும் அந்த சிறுமியை பக்கத்தில் உள்ள உறவினர் ஒருவருடைய வீட்டுக்கு கூட்டிச் சென்று பல முறை பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி உன் பெற்றோரிடம் சொன்னால் அவர்களை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். கடந்த புதன்கிழமை தன் தங்கை ஒருத்தி சித்தப்பாவுடன் இருப்பதை அந்த சிறுமி பார்த்தாள்.
உடனே, சித்தப்பாவுடன் சேராதே என்று தங்கையை எச்சரித்தாள். ஆனால் சிறுமியின் தங்கை அழுது கொண்டே சித்தப்பா தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதை கூறியிருக்கிறாள். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, தன் மற்ற தங்கைகளையும் கூப்பிட்டு விசாரித்தாள். சித்தப்பாவால் அனைவருமே பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது அப்போது தெரிய வந்தது. உடனே இது பற்றி தன் தாயிடம் தெரிவித்தாள். உடனே மகளை அழைத்துக் கொண்டு அந்த தாய் ஒரு டாக்டரிடம் சென்றார். நடந்த விவரங்கள் அனைத்தையும் டாக்டரிடம் அவர்கள் தெரிவித்தனர். பின்னர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமிகளின் சித்தப்பாவை கைது செய்தனர். மூன்று பெண் போலீஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 5 சகோதரிகளும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசார் அந்த கொடூர ஆசாமியை நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை மார்ச் 28ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.





















Raj
Singapore
3/24/2013 20:18:51
இவ்வளவு கொடூரமாக இந்திய பூமியில் அதுவும் ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருக்க வேண்டியவன் தனது ஐந்து பெண் குழந்தைகளிடம் இப்படி நடந்து கொண்டுள்ளதை பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது. இப்படி அனைத்து உறவுகளையும் சீரழிப்பது மதுவும் வக்கிரமான திரைப்படங்களுமே. அவற்றை முதலில் இந்திய அளவில் மேம்படுத்த வேண்டும்.