எனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை குடும்பமும் அனுபவிக்க வேண்டியுள்ளது
1கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:3/23/2013 5:20:31 AM
பாந்த்ரா: நான் மட்டுமல்ல என் குடும்பமும் சேர்ந்தே தண்டனையை அனுபவிக்க வேண்டியுள்ளது என்று நடிகர் சஞ்சய் தத் வேதனையோடு கூறினார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது பற்றி சஞ்சய் தத் வெளியிட்டுள்ள அறிக்கை:எனக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் என் இதயமே வெடித்து விட்டது. ஏனெனில், என்னுடன் சேர்த்து என் மனைவியும், 3 குழந்தைகளும், குடும்பத்தினரும் தண்டனையை அனுபவிக்க வேண்டியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நான் நிறையவே துன்பத்தை அனுபவித்து விட்டேன். இனியும் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் எனில் எனக்கு மனதளவிலும் உடல் அளவிலும் தைரியத்தை வரவழைக்க வேண்டும். நான் எப்போதும் நீதித்துறையை மதிப்பவன். இனியும் மதித்து நடப்பேன் என்று கண்களில் நீர் மல்க கூறுகிறேன். 4 வாரங்களுக்குள் நான் சரண் அடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த 4 வாரங்களுக்குள் நான் அனைத்து படங்களையும் நடித்து முடித்து கொடுப்பேன். யாரையும் கைவிட மாட்டேன். இவ்வாறு சஞ்சய் தத் கூறியுள்ளார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பத்திரிகை கவுன்சிலின் தலைவருமான மார்கண்டேய கட்ஜு மும்பையில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் மன்னிப்பு வழங்¢கும் அதிகாரம் ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் உள்ளது. சஞ்சய் தத் செய்தது தவறு தான். ஆனால் அவருக்கும் குண்டுவெடிப்புக்கும் தொடர்பில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற் காகவே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்திற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகளும், அதிகபட்சம் 10 ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்¢க முடியும். சஞ்சய் தத்திற்கு குறைந்தபட்ச தண்டனையே விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே அதிகம் கஷ்டப்பட்டுவிட்டார். எனவே, சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா ஆளுநர் பொது மன்னிப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.
தண்டனையை ரத்து செய்ய
ஆளுநருக்கு அதிகாரம்
மத்திய சட்ட அமைச் சர் அஸ்வினி குமார் டெல்லியில் அளித்த பேட்டி யில், ‘‘தண்டனை அளிக்கப்பட்டவர்கள் ஆளுநருக்கு மேல்முறையீடு செய்தால், சம்பந்தப்பட்டவரை மன்னித்து தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது’’ என்றார் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்றத்தில் கட்ஜு முக்கிய நீதிபதியாக விளங்கியவர். அவர் கருத்து கூறினால், அரசுக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவர்கள் அதை கூர்ந்து கவனிப்பார்கள். சஞ்சய் தத் விண்ணப்பம் செய்தால், ஆளுநர் அதை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார்’’ என்றார்.





















S.Govindarajan
chennai
3/23/2013 9:0:18
இந்த வாதம் ஏற்க முடியாதது . இதேபோல் மற்றவர்களையும் விட்டு விடுங்களேன்,