Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

கைது இல்லை, மரண தண்டனை இல்லை இந்தியா வாக்குறுதி ஏற்று இத்தாலி வீரர்கள் திரும்பினர்

கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:3/23/2013 4:53:58 AM


MORE VIDEOS

புதுடெல்லி: கடற்படை வீரர்களை கைது செய்ய மாட்டோம், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட மாட்டாது என்று இந்தியா வாக்குறுதி அளித்துள்ளதால் அவர் களை இத்தாலி அரசு டெல்லிக்கு நேற்று திருப்பி அனுப்பியது. கேரளாவில் கொல்லம் அருகே  கடலில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது அவ்வழியாக வந்த இத்தாலி நாட்டு சரக்கு கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், குமரி மாவட் டம் நித்திரவிளையை சேர்ந்த அஜிஸ்பிங்கி(21), கொல்லம் ஜெலஸ்டின் (50) ஆகியோர் பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பாக இத்தாலி கடற்படையை சேர்ந்த மாசி மிலியானோ, சால்வத்தோரே ஜிரோன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு கேரள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக, இத்தாலி வீரர்கள் சொந்த நாடு சென்று திரும்ப நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி அவர்கள் இத்தாலி சென்று திரும்பினர். இந்நிலையில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக, கடற்படை வீரர்கள் இருவரும் இத்தாலி செல்ல உச்ச நீதிமன்றம் மீண்டும்  அனுமதி அளித்தது. இந்த நிலை யில், கடற்படையினரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இத்தாலி அரசு கடந்த 11ம் தேதி திடீரென மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தாலியின் செயலை ஏற்க முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்தார். இத்தாலி தூதர் டேனியல் மஞ்சினி கொடுத்த வாக்குறுதிபடிதான் கடற்படை வீரர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனால், தூதர் மஞ்சினி இந்தியாவைவிட்டு வெளியேற உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கிடையே, கடற்படை வீரர்களை ஒப்படைக்க இத்தாலியை இந்தியா தொடர்ந்து வற்புறுத்தி வந்தது.இந்த நிலையில், 2 கடற்படையினரையும் திருப்பி அனுப்பப்போவதாக இத்தாலி நேற்றுமுன்தினம் நள்ளிரவில் அறிவித்தது. இது பற்றிய அறிவிப்பை நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் வெளியுறவுத் துறை அமை ச்சர் சல்மான் குர்ஷித் வெளியிட் டார். அவர் கூறுகையில், இத்தாலி கடற்படை வீரர்களை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அவர்கள் இந்தியா திரும்பினால் கைது செய்யப்பட மாட்டார்கள் என்றும்  மரண தண்டனை விதிக்கப்படாது என்றும் இத்தாலியிடம் இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது. இது இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு கிடைத்துள்ள வெற்றியாகும் என்றார். இதற்கிடையே, இத்தாலி விமானப்படையின் தனி விமானத்தில் கடற்படை வீரர்கள் 2 பேரையும் இத்தாலி வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஸ்டெபான் டி மிஸ்துரா நேற்று மாலை டெல்லிக்கு அழைத்து வந்தார்.

இந்திய நீதித்துறைக்கு
கிடைத்த வெற்றி: பிரதமர்
புதுடெல்லி: இத்தாலி கடற்படை வீரர்கள் திரும்புவது இந்திய நீதித்துறை க்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.இது பற்றி பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: மீனவர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய இத்தாலி கடற்படை வீரர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்திய நீதித்துறை செயல்பாடுகளின் மதிப்புக்கும், மாண்புக்கும் கிடைத்த வெற்றி. இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.


Navy players will not be arrested, the promise is that they will not be charged for the death sentence given to him by the Government of Italy
தொடர்புடையவை

மேலும்

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran