Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

டெல்லியில் ஹோலி பண்டிகையை சீர்குலைக்க சதி முக்கிய ஹிஸ்புல் தீவிரவாதி கைது

2கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:3/23/2013 4:53:45 AM


MORE VIDEOS

புதுடெல்லி: ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இதன் மூலம் மிகப் பெரிய தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பின், நாட்டின் முக்கிய இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறைக்கு ஏற்கனவே தகவல் கிடைத்தது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் நேபாளம் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சையத் லியாகத் என்ற தீவிரவாதியை டெல்லி போலீசார் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. மத்திய டெல்லியில் ஜும்மா மஸ்ஜித் பகுதியில் உள்ள ஹாசி அராபத் என்ற விருந்தினர் இல்லத்தில், ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக லியாகத் தெரிவித்தான். சோதனையில் ஏ.கே&56 ரக துப்பாக்கி, 3 கையெறி குண்டுகள், 2 கிலோவுக்கும் அதிகமான வெடிமருந்து பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட சம்பவத்துக்கு பழிவாங்கும் வகையில், ஹோலி பண்டிகையின் போது டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெறும் பெரோஸா கோட்லா மைதானத்தில் குண்டு வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். ஹிஸ்புல் தீவிரவாதி கைது சம்பவம் குறித்து டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ் கமிஷனர் ஸ்ரீவஸ்தவா நேற்று கூறியதாவது:லியாகத், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்தவன். கடந்த 1997ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு இவன் ஊடுருவி தீவிரவாத பயிற்சி பெற்றுள்ளான். பாகிஸ்தான் பாஸ்போர்ட் மூலம் இவன் கராச்சியிலிருந்து, காத்மாண்டு வந்துள்ளான். அங்கிருந்து நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தான். லியாகத் டெல்லியில் தற்கொலைப் படை தீவிரவாதியாக செயல்பட வேண்டும் என ஹிஸ்புல் கமாண்டர்கள் காசி நஸ்ரூதீன், பரூக் குரேஷி ஆகியோர் கூறியுள்ளனர். இதற்கான சதி திட்டங்களை காஷ்மீர் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள், டெல்லியில் லியாகத்திடம் வழங்குவர் எனவும் தெரிவித்துள் ளனர். டெல்லியில் சரியான இடத்தை தேர்வு செய்து தாக்குதல் நடத்த வேண்டும் என லியாகத்திடம் ஹிஸ்புல் கமாண்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தாக்குதலுக்குப் பின், லியாகத் காஷ்மீர் செல்லும்படியும் தீவிரவாதிகள் கூறியுள்ளனர் என்றார் அவர்.

During Holi celebrations planned attacks in Delhi Hizbul mujakitin
தொடர்புடையவை

மேலும்

novshath

dammam

3/25/2013 0:3:6

வெளியில் சுற்றி திரியும் பா ஜ க ,ஆர் எஸ் எஸ் . பஜ்ரங் தள்.சிவசேன தீவிரவாதிகளை மேலும் தீவிரவாத செயலை செய்ய துண்டி விட்டு, இல்லாத மற்றும் வாயில் நுழையாத பெயர்களை சொல்லி எத்தனை நாட்களுக்கு தான் அப்பாவி பொது மக்களை உன்னை போன்ற கவி தீவிரவாதிகளும் தீவிரவாத சிந்தனை கொண்ட பத்திரிக்கைகளும் மத்திய மாநில ஆளும் வர்க்கங்களும் ஏமாற்றுவிர்கள்.

liyavudeen

mayladuthurai

3/24/2013 16:36:2

இது முழுக்க முழுக்க பொய் அவர் கஷ்மீர் அரசாங்கத்திடம் நான் அஜாராக போறேன் என்று சொல்லி விட்டு தான் வந்தார் இந்தியா போலிஸ் மறுப்படியும் நாடகம் ஆடுது

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

21

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பேச்சு
பாராட்டு
நலம்
முடிவுகள்
தடை
தாமதம்
வீண் பழி
ஆதாயம்
ஆசி
மரியாதை
பிரச்னை
நட்பு
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran