Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பாகிஸ்தான் முன்னாள் அதிபர்

முஷாரப்புக்கு முன்ஜாமீன் விரைவில் நாடு திரும்புகிறார்

கருத்துகள்


MORE VIDEOS

கராச்சி : பர்வேஸ் முஷாரப் 1999ம் ஆண்டில் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைபற்றினார். அவர் பதவியில் இருந்த காலத்தில் சில நீதிபதி கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர், முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக இவரது பெயர் சேர்க்கப்பட்டது. அரசியல் நெருக்கடி காரணமாகவும், கைது செய்யப்படும் அச்சம் காரணமாகவும் 2009ம் ஆண்டில் அவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி சவுதி அரேபியாவில் அரசியல் தஞ்சம் புகுந்தார். அப்போதுமுதல் அவர் சவுதி அரேபியா, இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் மே 11ம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. அதில் இவரது அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியை வெற்றி பெறச் செய்யும் நோக்கத்துடன் முஷாரப் வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்ப திட்டமிட்டுள்ளார். அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படாமல் இருக்க அவரது மகள் அயிலா ரஸா கராச்சி நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். இது குறித்து முஷாரப்பின் வழக்கறிஞர் அகமது ரஸா கசூரி கூறுகையில், ''முஷாரப் மீதான 3 வழக்குகளிலும் நீதிபதி சஜ்ஜத் அலி ஷா முன்ஜாமின் வழங்கியுள்ளார். இதனால் விரைவில் அவர் நாடு திரும்புவார்’’ என்றார்.

Musharraf to return to the country soon munjamin

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran