அமெரிக்காவில் குடியேற 1 கோடி இந்தியர் விருப்பம்
கருத்துகள்
வாஷிங்டன் : ஒரு கோடி இந்தியர் உட்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 கோடி பேர் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். காலப் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாவது: உலகில் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் வாழ்பவர்கள் இந்த விருப்பம் கொண்டவர்களாக உள்ளனர்.சீனாவைச் சேர்ந்த 1.9 கோடி பேரும்,
நைஜீரியாவைச் சேர்ந்த 1.3 கோடி பேரும், இந்தியாவைச் சேர்ந்த 1 கோடி பேரும், பிரேசில், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா 60 லட்சம் பேரும் அமெரிக்காவில் குடியேறும் விருப்பம் கொண்டவர்களாக உள்ளனர். ஆனால், பாகிஸ்தான், ஈரானில் உள்ளவர்கள் அமெரிக்காவில் குடியேற விரும்பவில்லை. பாகிஸ்தானில் உள்ளவர்கள் சவுதி அரேபியா அல்லது இங்கிலாந்திலும், ஈரான் நாட்டினர் ஜோர்டான் அல்லது லெபனான் நாடுகளிலும் குடியேற விருப்பம் கொண்டுள்ளனர்.
லைபீரியாவில் 37 சதவீதம் பேரும், சியாரா லியோனில் வயது வந்தவர்களில் 4ல் ஒருவரும் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்புகின்றனர். உலகம் முழுவதிலும் உள்ள வயது வந்தவர்களில் 13% பேர் அதாவது 63 கோடி பேர் தங்கள் நாடுகளில் இருந்த வெளியேறி வேறு நாடுகளில் குடியேற விரும்புகின்றனர்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!