நியூசி. ரன் குவிப்பு
கருத்துகள்
ஆக்லாந்து : இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்துள்ளது. ஆக்லாந்து, ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து தொடக்க வீரர்களாக புல்டன், ரூதர்போர்டு களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்தது. ரூதர்போர்டு 37 ரன் எடுத்து ஸ்டீவன் பின் பந்துவீச்சில் அலஸ்டர் குக் வசம் பிடிபட்டார்.
இதைத் தொடர்ந்து புல்டன் , வில்லியம்ஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி ரன் குவித்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசி. ஒரு விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்துள்ளது. புல்டன் 124 ரன் (277 பந்து, 15 பவுண்டரி, 3 சிக்சர்), வில்லியம்சன் 83 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!