டோனியின் டாஸ் ராசி...
கருத்துகள்
* இந்திய அணி கேப்டன் டோனி, நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 4 டெஸ்டிலும் டாஸ் கேட்பதில் தவறாகக் கணித்துள்ளார். இதற்கு முன் இலங்கைக்கு எதிராக நடந்த தொடரிலும் (3 டெஸ்ட், 2010), எல்லா போட்டியிலும் பூவா,தலையா?வில் தோற்றுள்ளார்.
* ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர், டெஸ்ட் போட்டிகளில் 2வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார். முன்னதாக, சிட்னியில் இலங்கையுடன் நடந்த டெஸ்டில் (ஜன. 2013) முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.
* பிலிப் ஹியூஸ் வெளிநாட்டு மைதானங்களில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் நேற்று 1000 ரன் கடந்தார். அவர் இதுவரை அந்நிய மண்ணில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1038 ரன் (சராசரி 39.92, சதம் 3, அரை சதம் 4) எடுத்துள்ளார்.
* ஆஸி. வீரர் சிடில் (47* ரன்) தனது அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தார். சிட்னியில் இங்கிலாந்துக்கு எதிராக (ஜன. 2011) அவர் 43 ரன் எடுத்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது.
* நடப்பு தொடரில் இதுவரை நடந்துள்ள 7 இன்னிங்சில், ஆஸி. அணி கேப்டனை 6 முறை ஆட்டமிழக்க செய்த பெருமை ஜடேஜாவுக்கு கிடைத்துள்ளது (கிளார்க் 5 முறை, வாட்சன் 1).





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!