போலி ஆவணம் தயார் செய்ததாக லாட்டரி அதிபர் மனைவி கைது
கருத்துகள்
சென்னை : தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்ட பின்னரும் லாட்டரி அதிபர் மார்டின் தனது தொழிலை செய்து வந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் விசாரணையை தொடங்கினர். கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி ஆதம்பாக்கத்தில் உள்ள மார்டினின் நெருங்கிய நண்பரும், ஏஜெண்டுமான தொழில் அதிபர் நாகராஜ் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.7 கோடியே 50 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் லட்சக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு நண்பரான அண்ணாநகரை சேர்ந்த மூர்த்தி வீட்டில் நடத்திய சோதனை யில் ஸீ50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நாகராஜ், மூர்த்தி கைது செய்யப்பட் டனர். அவர் களின் தகவலின் பேரில் மார்டின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார். பல முறை முயன்றும் ஜாமீன் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து ஆதம்பாக்கத்தில் நாகராஜனுக்கு சொந்தமான வீட்டை வாங்குவதற்காக ஸீ8 கோடி கொடுத்தோம். அந்த பணம்தான் போலீ சார் பறிமுதல் செய்தனர். எனவே, அது சட்டவிரோ தமான பணம் இல்லை என்று மார்டின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் மார்டினுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.
போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். வீட்டை வாங்குவதற்காக பணம் இருப்பு வைக்கப்பட்டதாக கூறப்பட்ட தே தியும், அவர்கள் கோர்ட்டில் குறிப்பிட்டிருந்த தேதியும் வேறுபட்டது. போலி ஆவணம் தயார் செய்து அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
எனவே, போலி ஆவணம் தயார் செய்ய துணை யாக இருந்ததாக மார்டின் மனைவி லீமா ரோஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொ டர்ந்து நேற்று மாலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் சென்ற அவரை விமான நிலையத்தில் தயாராக இருந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர், அங்கிருந்து சென்னைக்கு இரவோடு இரவாக அழைத்து வந்தனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். லீமா ரோஸ் சமீபத்தில் ஐஜேகே கட்சியில் துணை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!