Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

தமிழக சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம்

கடந்த நிதியாண்டில் ரூ.50,115 கோடிக்கு ஏற்றுமதி

கருத்துகள்


MORE VIDEOS

சென்னை : கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் ரூ.50,115 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறையின் கூடுதல் செயலர் மதுசூதன் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதி, அதிக வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு ''மெப்ஸ்,எஸ்இஇசட்'' என்ற விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. ஐ.டி, பொறியியல், செல்போன், ஜவுளி, மருந்துகள், தோல் பொருட்கள் உட்பட 18 துறைகளில் இருந்து சிறந்து விளங்கிய 54 பேருக்கு மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறையின் கூடுதல் செயலர் மதுசூதன் பிரசாத் விருது வழங்கினார். இதில் தமிழக அரசின் சிப்காட், எல்காட் நிறுவனங்களும் விருதுகளை பெற்றன. விழாவில் அவர் பேசியதாவது:

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி மிகவும் அவசியமானது. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் 158 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 34 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. 2011,12 நிதியாண்டில் தமிழகத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் ரூ.50,115 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல.

இதிலும், சென்னை மண்டலத்தின் பங்கு மகத்தானது. இங்கு மட்டுமே 2011,12 ஆண்டில் ரூ.10,688 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2008,09ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் மந்தமாக இருந்த போதிலும், சென்னை பொருளாதார மண்டலம் 26 சதவீதம் வளர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஜிஎஸ்டி சாலை, பெங்களூர் , ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட இடங்கள் தொழிலக சாலைகளாக உள்ளன. முதலீடுகளை கவர தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் இணைந்து செயல்படுகிறது. வாகனம், ஜவுளித்துறை, எலக்ட்ரானிக், டெலிகாம், ஐடி உள்ளிட்ட துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மெப்ஸ் வளர்ச்சி ஆணையர் எ.கே.பாம்பா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசு உயர் அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள் பங்கேற்றனர்.

Rs .50,115 crore in the last financial year, exports
தொடர்புடையவை

மேலும்

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran