Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ஐ.ஓ.சி.யிடம் இருந்து டேங்கர்களை திரும்ப பெற இலங்கை அரசு முடிவு

கருத்துகள்


MORE VIDEOS

கொழும்பு : இலங்கையின் திரிகோணமலை நகரில் இந்தியாவின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த எண்ணெய் டேங்கர்களில் பெருமளவை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், இலங்கையில் லங்கா ஐஓசி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு கடந்த 2003ம் ஆண்டில், திரிகோணமலையில் உள்ள இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட 99 எண்ணெய் டேங்கர்களை பயன்படுத்திக் கொள்ளும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்து ஓட்டுப்போட்டது.

இதனால் கோபம¬ டந்த இலங்கை அரசு, லங்கா ஐஓசிக்கு ஒப்படைக்கப்பட்ட டேங்கர்களில் பெரும்பாலானவற்றை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லா கூறுகையில், ‘‘லங்கா ஐஓசி 15 டேங்கர்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இதனால் மீதமுள்ளவற்றை இலங்கை அரசின் சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தன் வசம் எடுத்துக் கொண்டு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது’’ என்றார்.

The Sri Lankan government decided to withdraw from the tanker to IOC

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran