Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபை கைது செய்ய இன்டர்போல் மறுப்பு

கருத்துகள்


MORE VIDEOS

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்நாடு விடுத்த கோரிக்கையை ஏற்க, இன்டர்போல் மறுத்து விட்டது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (69), கடந்த 2009ம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி, துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில், முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலையில் சம்பந்தப்பட்ட முஷாரபை கைது செய்ய கைது வாரன்ட் நோட்டீஸ் வெளியிட வேண்டும் என்று கோரி, பாகிஸ்தான் சார்பில், சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலுக்கு முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், ‘முஷாரபை கைது செய்யக்கோருவதன் பின்னணியில் அரசியல் உள்ளது. இதனால் இக்கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது’ என்று இன்டர்போல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டிலும் இதேபோன்ற கோரிக்கையை பாகிஸ்தான் விடுத்தது. அப்போது போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறி, அந்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள இன்டர்போல் மறுத்துவிட்டது.

பாகிஸ்தானில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடுவதற்காக தான் தாய்நாடு திரும்பப் போவதாக முஷாரப் அறிவித்துள்ளார். இந்நிலையில், அவரை கைது செய்வதற்காக பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளது.

Former Pakistani President Musharraf refused to Interpol to arrest

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran