அப்போலோ ராக்கெட் இன்ஜின் அட்லாண்டிக் கடலில் கண்டுபிடிப்பு
கருத்துகள்
நியூயார்க் : கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலவுக்கு மனிதனை அனுப்ப பயன்பட்ட அப்போலோ ராக்கெட்டின் 2 இன்ஜின்கள், அட்லாண்டிக் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் (நாசா), கடந்த 1969 மற்றும் 1970ம் ஆண்டில் சாட்டர்ன் வி ராக்கெட்களை நிலவுக்கு அனுப்பியது. இதில் 5 எப்,1 ராக்கெட்கள், முதல் நிலையில் பூஸ்டர்களை எரியூட்ட பயன்படுத்தப்பட்டன. இவை பூஸ்டர்கள் செயல்பாட்டுக்கு வந்தவுடன், ராக்கெட்டில் இருந்து கழன்று கடலில் விழுந்துவிட்டன.
இந்நிலையில், அமேஜான்.காம் என்ற இணையதளத்தின் நிறுவனர் ஜெப் பெஜாஸ் ஆழ்கடலில் விழுந்த அப்போலோ ராக்கெட்டின் இன்ஜினை தேடும் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தார். அப்போலோ,11 ராக்கெட் மூலம்தான் மனிதன் முதன் முதலில் நிலவில் அடியெடுத்து வைத்தான். இதற்கான பணிகளில் ஜெப் பெஜாசின் குழுவினர் இறங்கினர். அவர்களின் இடைவிடாத தேடுதல் மூலம் ஆழ்கடலில் மூழ்கியிருந்த 2 ராக்கெட் இன்ஜின்களை அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றில் முக்கியமான கண்டுபிடிப்பு என்றும், ஜெப் பெஜாசின் குழுவினரை பாராட்டுவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!