கம்பு, கேழ்வரகை இரையாக கொடுத்து சிட்டுக்குருவி தினம் கொண்டாட்டம்
கருத்துகள்
கோவில்பட்டி: கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை சிட்டுக் குருவிகளுக்கு உணவாக கொடுத்து உலக குருவிகள் தின விழா
கொண்டாடப்பட்டது.ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதி உலக சிட்டு குருவிகள் தினமாக கடைப் பிடிக்கப்படுகிறது. அழிந்து வரும் சிட்டு குருவி இனத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. குருவிகளில் சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி, கருங்குருவி, படை குருவி போன்ற பல்வேறு வகைகள் உள்ளன. குருவிகளின் அழிவிற்கு தானிய உணவு பற்றாக்குறை மற்றும் பயிர்களை காப்பாற்ற பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் காரணமாகும்.இன்று வீடு கட்டுவதற்காக வயல் வெளிகள், வனங்களை அழித்து விட்டோம். இதனால் குருவிகள் கூடு கட்ட இடமின்றி போய் விட்டது. உலகம் முழுவதும் வெப்ப மண்டலமாக மாறியதாலும், செல்போன் டவர்களில் எழும் கதிர்வீச்சாலும் குருவிகளுடன் சேர்த்து, 226 பறவையினங்களும் அழிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் பொருட்டு இயக்கங்களும் தோன்றியுள்ளன. கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் உலக குருவிகள் தினவிழா நேற்று நடந்தது. தலைமையாசிரியர் அய்யம்மாள் தலைமை வகித்து சிட்டுக் குருவிகளை பாதுகாக்க வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு படங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை மாணவிகளுக்கு விநியோகம் செய்தார்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!