வங்கதேச அதிபர் சிங்கப்பூரில் மரணம்
கருத்துகள்
டாக்கா : வங்கதேச அதிபர் முகமத் ஜில்லுர் ரெஹ்மான் நேற்று சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்தார். அவருக்கு வயது 85. வங்கதேச அதிபர் ரெஹ்மான் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். கடந்த வாரம் அவருக்கு நுரையீரலில் கிருமி ஏற்பட்டு கவலைக்கிடமானார். 10ம் தேதியன்று ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அவர் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு, மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த ரெஹ்மான் நேற்று மாலை 6.47க்கு இறந்தார்.
இத்தகவலை சிங்கப்பூரில் உள்ள வங்கதேச தூதர் அறிவித்தார். மருத்துவமனையில் ரெஹ்மானின் ஒரே மகன் மற்றும் மகள்கள், உறவினர்கள் இருந்தனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும், அந்நாட்டின் நிறுவனருமான முஜிபூர் ரெஹ்மானின் நெருங்கிய நண்பர் முகமத் ஜில்லுர் ரெஹ்மான். சிறந்த அரசியல் தலைவரான இவர், கடந்த 2008ம் ஆண்டு அவாமி லீக் கட்சியின் வெற்றிக்கு மிகவும் உதவியாக இருந்தார். அக்கட்சியின் ஷேக் ஹசீனா பிரதமராக பொறுப்பேற்ற பின், 2009ல் அதிபராக ரெஹ்மான் பதவியேற்றார். சமீபத்தில்தான் அவர் 85வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!