Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பிளீச்சிங் பவுடர் சோப் பவுடர்... சுத்தம் பணம் போடும்!

மாற்றம் செய்த நேரம்:7/26/2013 2:16:45 PMBleaching Powder Powder Cho ... Make clean money!


MORE VIDEOS

எவ்வளவு வசதியான வீடாக இருந்தாலும், அடிப்படை சுத்தம் மற்றும் சுகாதாரத்துக்கு எளிமையான சில பொருள்கள் அவசியம் தேவை.  பாத்திரங்களைத் துலக்க கிளீனிங் பவுடர், குளியலறை மற்றும் கழிவறைகளை சுத்தப்படுத்த பிளீச்சிங் பவுடர், துணி துவைக்க வாஷிங் பவுடர்... என  இவை இல்லாமல் அன்றாட வேலைகள் சாத்தியமே இல்லை.

கவர்ச்சியான விளம்பரம், கலர்ஃபுல் பேக்கிங் என மார்க்கெட்டில் தினம் ஒன்றாக அறிமுகமாகும் இந்தப் பொருள்களில் எது சிறந்தது எனத்  தீர்மானிப்பது அத்தனை சுலபமல்ல. பணம் விரயமாவதுதான் மிஞ்சும். ‘‘விளம்பரங்கள் எல்லாம் மக்களை ஏமாத்தற விஷயங்கள். ஒவ்வொரு  நிறுவனமும் தன்னோட தயாரிப்புதான் சிறந்ததுன்னு சொல்ல, ஏதோ ஒரு விளம்பர உத்தியைச் செய்யறாங்க. அதை மக்களும் நம்பறாங்க.

மத்தபடி சோப் பவுடர், கிளீனிங் பவுடர், பிளீச்சிங் பவுடர்னு வீட்டு சுத்தத்துக்கான அத்தனை பொருள்களுக்கும் அடிப்படை தயாரிப்பு முறை  ஒன்றுதான். அதை நாமளே நம்ம வீடுகள்ல தயாரிச்சு உபயோகிச்சா, செலவு குறையும்...’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜீவா ஆனந்தி. 12  வருடங்களுக்கும் மேலாக இந்த பிசினசில் இருக்கிற ஜீவா ஆனந்தி, தனது தயாரிப்புகளை விற்பதற்கென்றே சின்னதாக ஒரு கடையும்  வைத்திருக்கிறாராம்.

பாத்திரம் துலக்கும் பவுடர், பிளீச்சிங் பவுடர், தவிர துணி துவைக்க சாதாரண சோப் பவுடர், வெள்ளைத் துணிகளைத் துவைக்க ஸ்பெஷல் பவுடர்  மற்றும் கறைகளை நீக்கும் இன்னொரு பவுடர் என ஐந்து வகைகளைத் தயாரிக்கிறார். ‘‘கடைகள்ல கிடைக்கிற சோப் பவுடர்கள்ல கலர் கலரா கடுகு  அளவு உருண்டைகளைப் பார்க்கலாம். அதெல்லாம் உடைஞ்சு, கரைஞ்சு, துணியை வெளுக்கச் செய்யறதுல பெரியளவுல பங்கு வகிக்கிற மாதிரி  விளம்பரம் பண்றதையும் பார்த்திருப்பீங்க.

உண்மையைச் சொல்லணும்னா, அப்படி எதுவும் இல்லை. அதெல்லாம் வெறும் அழகுக்காக, மக்களை ஈர்க்க சேர்க்கப்படற பொருள்கள். அதனால எந்தப்  பலனும் இல்லை. அதையும்கூட நாம வீட்லயே தயாரிக்க முடியும். வாஷிங் சோடா, டிடெர்ஜென்ட், டீப்பால், சாக் பவுடர், சோடா மாவுன்னு இந்தப்  பொருள்கள் தயாரிக்கத் தேவையான எல்லாம் கெமிக்கல் கடைகள்ல கிடைக்கும். ஆர்டர் வர வர செய்து கொடுக்கிறது நல்லது. மொத்தமா செய்து  வச்சுக்கிட்டா, அதுல சேர்க்கற வாசனை மங்க ஆரம்பிக்கும்.

சின்னச் சின்ன கடைகள், அக்கம் பக்கத்து வீடுகள்ல கொடுத்தாலே நல்லா பிசினஸ் ஆகும். கால் கிலோ, அரை கிலோ பாக்கெட் தவிர, 100 கிராம்,  50 கிராம் பாக்கெட் போட்டு விற்பனைக்குக் கொடுத்தா, இன்னும் அதிக மக்களை உங்க பிசினஸ் ஈர்க்கும். 500 ரூபாய் முதலீடு போதும், 50  சதவிகிதம் லாபம் பார்க்கலாம்” என்கிற ஜீவா, 500 ரூபாய் கட்டணத்தில், ஒரே நாள் பயிற்சியில் 5 வகை பவுடர்களை கற்றுத் தருகிறார்.

The house was comfortable, clean and basic sanitation for the simple need for some materials.
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

டால்டா 13இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமை வியாரவல்லா. 13 வயதிலேயே அவருக்குப் புகைப்பட ஆர்வம் வந்தது. 13 வயதிலேயே  திருமணம் நடந்தது. பிறந்த ...

திடீரென தன்னம்பிக்கை குறைவாக உணர்கிறீர்களா? உங்களையே உங்களுக்குப் பிடிக்கவில்லையா? சட்டென பார்லர் சென்று ‘ஐ ப்ரோ திரெடிங்’  செய்து பாருங்கள். ஒரு நல்ல ஃபேஷியல் அல்லது ...

Advertisement

தேர்தல் செய்திகள்

Advertisement
Advertisement

மருத்துவம்


சமையல்

எப்படிச் செய்வது?பூசணிக்காயை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் சிறிது தண்ணீர்விட்டு வேக வைக்கவும். ஒரு விசில் அடித்ததும்  இறக்கி, இருக்கும் தண்ணீரில் ...

எப்படிச் செய்வது?பூசணிக்காயை தோல் சீவி கழுவி சிறிய நீளமான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்ததும், நறுக்கி வைத்த  பூசணித் துண்டுகளைச் சேர்த்து தீயை மிதமாக ...


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

24

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
உயர்வு
உதவி
தடை
கவலை
தன்னம்பிக்கை
மகிழ்ச்சி
வெற்றி
தர்மம்
திறமை
மீட்பு
பிரச்னை
கவலை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran