Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்!

மாற்றம் செய்த நேரம்:3/21/2013 3:13:06 PMShuffling the Internet Literary Women!


MORE VIDEOS

வழக்கமான விஷயங்களைத் தாண்டி வானுயரும் ராக்கெட் வரை சகலத்தையும் அலசும் வலையுலகப் பெண்கள் பற்றி மார்ச் 8 தினகரன் இணைய  தளத்தில் மகளிர் பகுதியில் அறிமுகம் செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் சில மகளிர் சக்திகள் இதோ...

‘காற்றுவெளி’யில் உலவும் கவிதாயினி மதுமிதா, கவிதைகளைத் தாண்டி மொழிபெயர்ப்புகளுக்கும் தொகுப்பு நூல்களுக்கும் ஏராளமான உழைப்பு  நல்குபவர்.
madhumithaa.blogspot.in

டெல்லியில் வசிக்கிற எம்.ஏ.சுசீலா உலகப் புகழ்பெற்ற ‘குற்றமும் தண்டனையும்‘ நாவலை தமிழுக்கு அளித்தவர்.
www.masusila.blogspot.com

நிலவு, நட்சத்திரம், மேகம், மழை, கடல், அலை, பாட்டு, புத்தகங்கள் என்று எப்போதும் ஒரு கனவுலகத்தில் வாழ்கிற ஜெய்ப்பூர் அருணா அன்புடன்  எழுதுபவர்.
naanirakkappokiraenaruna.blogspot.com

எப்போதாவது கவிதை எழுதுகிற இன்ஜினியர் அமுதா ‘என் வானம் என் எண்ணங்கள்’ என உரிமையுடன் பகிர்பவர்.
nandhuyazh.blogspot.in

‘எதிர்கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்கச் செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி  சேஷசாயி’ என கதைகள் பல சுவாரஸ்யமாகப் படைப்பவர்.
chuttikadhai.blogspot.com

கலைகளும் சிந்தனையுமாக சிதறுகின்ற முத்துகளை அளிக்கின்ற மனோ சுவாமிநாதன் சத்தான உணவு குறிப்புகளும் தருபவர்.
muthusidharal.blogspot.com

‘மரகத’த்தில் கோயில், கோபுரங்கள், பயணங்கள் மற்றும் ஆன்மிக கட்டுரைகளை எழுதுகிற புவனேஸ்வரி ராமநாதன் சிறுகதைகளும் எழுதுபவர்.
www.maragadham.blogspot.com

‘திருமதி பக்கங்க’ளில் கோலங்களை சிறப்பாக அளிக்கும் கோமதி அரசு, ‘உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும் செய்வதும் நித்திய  கடன்’ என்பவர்.
mathysblog.blogspot.com

‘சமையல் அட்டகாசங்கள்’ செய்கிற ஜலீலா கமல் சென்னையில் பிறந்து துபாயில் வாழ்பவர். ‘தினம் தினம் புதுமைதான்’ என தையற்கலை, குழந்தை  வளர்ப்பு, வீட்டுக்குறிப்புகள், அனுபவங்கள் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பகிர்பவர்!
samaiyalattakaasam.blogspot.com

‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்கிற ஸாதிகா ஹசனா எல்லாம் எழுதுபவர்.
shadiqah.blogspot.com

‘கவிழாத காகித ஓடம்’ என கவிதைகள் படைக்கும் வங்கி அதிகாரி பத்மஜா நாராயணன் ‘மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்’ நூலையும் தந்தவர்.
kakithaoodam.blogspot.com

பெண்களைப் பற்றியே நிறைய எழுதும் ஊடகவியலாளர் கீதா இளங்கோவன் சமீபத்தில் ‘மாதவிடாய்’ ஆவணப் படத்தை அளித்தவர். ஃபேஸ்புக்கில்  ‘பெண்’ பக்கத்தை நடத்துபவர். சிந்தனையை நெருடும் செய்திகள், தகவல்களை உங்களுடன் பகிர்பவர்.
thulithuli.blogspot.com

‘அமைதிச்சாரல்’ வாயிலாக பிடித்தமான காட்சிகளை கட்டுரை, கவிதை, புகைப்படமாகவும் பதிவு செய்கிற சாந்தி மாரியப்பன் மகாராஷ்டிராவில்  வசிப்பவர்.
amaithicchaaral.blogspot.com

‘வாழ்ந்து பாரடி பெண்ணே’ என உற்சாகப்படுத்தும் மலீக்கா ஃபாரூக் ‘நீரோடை’யாக எழுதுபவர்.
niroodai.blogspot.com

பர்சனாலிட்டி டெவலப்மென்ட் பற்றி எழுதும் கலா ஸ்ரீராம் ‘வீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி?’ எனக் கேட்பவர்.
pudugaithendral.blogspot.com

Vanuyarum rocket beyond the usual things, the expansion of the all-women receive in the women's section of the web site on March 8, you had introduced. Here are a few of the women on the series ...

செய்திகள்

Advertisement


மருத்துவம்


சமையல்

எப்படிச் செய்வது?மாதுளையை முத்துகளாக உதிர்த்துக் கொள்ளவும். ஆரஞ்சு சுளைகளில் விதை நீக்கித் தனியே வைக்கவும். மற்ற பழங்கள், காய்கறிகளை சிறிய  துண்டுகளாக வெட்டவும். எலுமிச்சைச்சாறு, ஆலிவ் ஆயில், ...

எப்படிச் செய்வது?பாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் உரித்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும். தனியாவையும் சீரகத்தையும்  அப்படியே மிக்சியில் நைசாக பொடிக்கவும். ...


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran