பணிமனை அமைக்க இடம் தேர்வு
பதிவு செய்த நேரம்:2013-03-23 11:13:55அலங்காநல்லூர், : அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க அலங்காநல்லூர் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மதுரை நகர் பகுதியில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைகளில் பேருந்துகளை நிறுத்தி பழுது நீக்குவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரையின் புறநகர் பகுதிகளான மேலூர், சோழவந்தான், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் புறநகர் பணிமனைகள் அமைக்கப்பட் டுள்ளன. அலங்காநல்லூர் வடபகுதியில் செல்லும் பெரும்பாலான இரவு பேருந்துகளை அந்தந்த கிராமங்களில் நிறுத்தி வைப்பது இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.
இதற்காக அலங்காநல்லூர் பகுதியில் அரசு போக்குவரத்துகழக பணிமனை அமைக்க வேண்டி பல்வேறு தரப்பை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை அருகே 15பி மேட்டுப்பட்டியில் புதிய பணிமனை அமைய உள்ளது. இதற்கான இடத்தை எம்எல்ஏ கருப்பையா, மதுரை மண்டல போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் மணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.










